அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு இருவரும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இருந்து நீதிபதி விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மூத்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் இருந்து 2023ஆம் ஆண்டு ராமச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்தது. இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிராக தாமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குகளில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை எம்.எம்.சந்தோஷ் ராஜேஷ் பிந்தல் அமர்வில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தான் இடம்பெறாத வேறு அமர்வு முன் பட்டியலிட நீதிபதி எம்.எம்.சந்தோஷ் உத்தரவிட்டுள்ளது.
திமுக அமைச்சர்கள் மீதான வழக்கில் இருந்து நீதிபதி விலகல்
