அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி மாவட்ட அம்மா பேரவை சார்பில் நடைபெற்றது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தென் சென்னை தெற்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில், முத்தமிழ் செல்வன் தலைமையில் நீர், மோர் பந்தல் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் அதிமுக வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தென்சென்னை
மாவட்ட செயலாளரும் ஆன எம் கே அசோக் கலந்து கொண்டார். அப்பொழுது அவரை வரவேற்பதற்காக அதிமுகவினர் சாலையில் பட்டாசு வெடித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு தர்பூசணி, கிறுனி பழம், மோர், ரஸ்னா உள்ளிட்டவைகளை மாவட்ட செயலாளர் அசோக் வழங்கினார். அவருடன் மாவட்ட பகுதி கிளை வார்டு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.