• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மதுரை மாவட்டத்தில் (ரம்ஜான்) ஈகை திருநாள் சிறப்பு தொழுகை..,

ByKalamegam Viswanathan

Mar 31, 2025

மதுரையில் ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.

புனித ரமலான் மாதமான நேற்றுடன் நோன்பு முடிவடைந்த நிலையில் ரம்ஜான் ஈகைப் பெருநாள் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக ரம்ஜான் சிறப்பு தொழுகை அரசரடி யு சி பள்ளி மைதானம் உள்ள திடலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் சேக் இப்ராஹிம் தலைமையிலும் மாவட்ட பொருளாளர் அப்துல்ஹமீது கிளைத் தலைவர் ஹக்கீம்ஷெரீப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் புத்தாடைகள் அணிந்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று இஸ்லாமியர்கள், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.