• Sat. Apr 26th, 2025

கொடி கம்பங்களில் நோட்டிஸ் ஒட்டிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்..,

ByKalamegam Viswanathan

Mar 31, 2025

மதுரை மாநகரில் அவனியாபுரம், ,கோ புதூர், அண்ணாநகர், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் எனமதுரை நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் சார்பில் கட்சி கொடி கம்பங்களில் ஒட்டினர்.

அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகளின் கொடி கம்பங்களை 12 வாரங்களில், அவர்களாகவே அகற்றி கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வும் உறுதி செய்தது.

இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அவனியாபுரம் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களில் அகற்ற நோட்டீசுகளை ஒட்டினர்.