• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கலெக்டரிடம் சரவெடிக்கு அனுமதி வழங்க கோரி மனு..,

ByK Kaliraj

Mar 29, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆணையூர் ஊராட்சி பெரிய பொட்டல்பட்டி கிராமத்தில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.

அப்போது ஆனையூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு, சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பொன்னாடை போர்த்தினார் .தொடர்ந்து கிராம மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் .

அப்போது சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பட்டாசு ஆலையில் பணி பரியும் பெண் தொழிலாளர்கள் கலெக்டர் ஜெயசீலனிடம் சரவெடிக்கு அனுமதி வழங்கினால் மட்டுமே எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். ஆகையால் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவை படித்து பார்த்து அரசுக்கு உங்கள் கோரிக்கை குறித்து தெரிவிக்கிறேன் என உறுதி அளித்தார்.