• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ரமலான் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல் விழா.

ByK Kaliraj

Mar 29, 2025

விருதுநகர் மாவட்டம் ரம்லான் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
நரிக்குடி அருகே உள்ள வீரசோழன் சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் நான்காயிரம் ஏழை ,எளியோருக்கு இந்திய தேசிய லீக் மற்றும் கே.எஸ்.ஓ அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலை மற்றும் உதவி பணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,

இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது பொதுமக்க ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் தலைமை தாங்கினார், ஜமாத் தலைவர் சம்சுதீன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சாதிக் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஜமாதி நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.