• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதிய மின்சார இருசக்கர வாகனம் அறிமுக நிகழ்ச்சி..,

BySeenu

Mar 27, 2025

கோவையை உற்பத்தி மையமாக கொண்டு செயல்படும் ஓசோடெக் நிறுவனத்தின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுக்கக்கும் விதமாக புதிய மின்சார இருசக்கர வாகனம் அறிமுக செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை அரசூர் பகுதியில் நடைபெற்ற இதில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு வாகனங்களை அறிமுகம் செய்து வைத்து மின்சார வாகனத்தின் முக்கிய பயன்கள் குறித்து பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இன்று அறிமுகம் செய்யப்பட்ட வாகனம் ,34 ஆயிரத்திலிருந்து 84 ஆயிரம் வரையிலான மின் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதில் விவசாயிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தும் விதமாக 295 கிலோ வரை எடையை எடுத்துக்கொண்டு போகலாம். அதேபோல பேட்டரி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை இந்த வாகனத்தில் அடங்கியுள்ளது.

இருசக்கர வாகனம் உலக அளவில் அதிகமாக இருக்கக்கூடிய நாடாக இந்தியா இருக்கிறது.அதேபோல மின் வாகனம் அதிகமாக உள்ள நாடாக இந்தியா உருவாகும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,சேட்டிலைட் அனுப்பும்போது பேட்டரி என்பது சிறப்பாக இருக்க வேண்டும்.பேட்டரியை கவனிக்காததால் சேட்டிலைட் வெடித்த காலங்களும் உண்டு, அதையும் தாண்டி நல்ல ஆராய்ச்சிகள் நடந்ததனால் சேட்டிலைட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.பல கோடி ரூபாயில் செய்த செயற்கைக்கோள் பயனடையும்போது பேட்டரி என்பது மிக முக்கியம் என தெரிவித்தார்.

மேலும், அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும்.சாட்டிலைட் பேட்டரிக்கு அடுத்தபடி அதே போல் ஒரு பேட்டரி என்பது இந்த வாகனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.கரியை கக்கதா மின்சார உற்பத்தியை உருவாக்கும் போது பசுமையான இந்தியா உலகத்திற்கு நாம் போக முடியும்.

இப்பொழுது இருக்கக்கூடிய விண்வெளி அமைப்பில் நாம் நீர் உள்ளிட்ட அனைத்தும் எடுத்துக் கொண்டு செல்லக்கூடிய நிலைமை உள்ளது.ஆனால் சீனாவில் நீர் ஆதாரம் இருக்கிறது.அங்கு விவசாயம் செய்யக்கூடிய அனைத்தும் இருக்கிறது.இந்தியாவை பொருத்தவரை நிலவில் ஒரு மையம் அமைப்பது சரி என தெரிவித்தார்.

குலசேகரப்பட்டினத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு முக்கியமான தேவை என்பது அடிப்படை வசதிகள்,இது இருந்தால் சில மாதங்களில் ராக்கெட் லான்ச் செய்ய முடியும் என தெரிவித்தார்.

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வந்த சுனிதா வில்லியம் ,உடலில் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் 45 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பது அவசியம் என தெரிவித்தார்.