மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் முதன்முறையாக மணல்மேடு கடைவீதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு ; ஆர்வமுடன் பொதுமக்கள் தர்பூசணி நீர்மோர் ரோஸ் மில்க் ஜூஸ் வாங்கி பருகிச்சென்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. கோடைக்காலத்தில் தண்ணீர் பந்தல் அமைக்க தவெக நிர்வாகிகளுக்கு கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மணல்மேடு பேரூராட்சி பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயனளிக்கும் வகையில் மணல்மேடு கடைவீதியில் வடக்கு ஒன்றிய செயலாளர் மனோகர் தலைமையில் நீர்மோர்பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் குட்டி.கோபிநாத் கலந்துகொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், ரோஸ் மில்க் ஜூஸ் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
அது மட்டுமல்லாமல் பேருந்து நிறுத்தத்தில் நின்ற அரசு பேருந்து ஏறி பேருந்து பயணிகளுக்கும் நீர்மோர், ரோஸ்மில்க், தர்பூசணிகளையும் வழங்கினார். இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சுதாகர், வினோதினி, ராஜேஷ், பிரவின் மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்கள் மணிகண்டன், ஜீவா, விக்னேஸ்வரன், சுபாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.