• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

புதிய மைல்கல்லை எட்டிய அஸ்வின்

Byமதி

Nov 30, 2021

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் அஸ்வின். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் இதுவரை இந்திய அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 418 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய டாப் 3 பவுலர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் அஷ்வின்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், 417 விக்கெட்டுகள் வீழ்த்தி டாப் 3-வது இடத்தில் இருந்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஹர்பஜனை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு 418 விக்கெட்டுகளுடன் முன்னேறியுள்ளார்.

கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், கபில் தேவ் 434 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். பலரும் அஷ்வினின் இந்த சாதனையை பாராட்டி வருகின்றனர்.