• Fri. Apr 26th, 2024

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை தமிழகத்திற்கு மட்டும் ரூ.2,409 கோடி நிலுவை – மத்திய நிதி அமைச்சகம்

Byமதி

Nov 30, 2021

நேற்று நடைபெற்ற நாடாளமன்றக் கூட்டத்தொடரில், மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளது நிதி அமைச்சகம்.

அதன்படி, 2017-2018 , 2018- 2019 மற்றும் 2019-2020 ஆகிய ஆண்டுகளில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி தொகை வழங்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஜிஎஸ்டி வசூல் குறைந்தது. இதனால் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை மாநில அரசுக்கு முழுமையாக வழங்கி பூர்த்தி செய்ய இயலவில்லை எனவும் இருப்பினும், 2020 ஏப்ரல் மாதம் முதல் 2021 மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் இழப்பீட்டை ஓரளவுக்கு பூர்த்தி செய்யும் வகையில் தமிழகத்திற்கு 9845 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், இதே கால கட்டத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2049 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளிட்டுள்ள தரவுகளின் படி, 2019-2020 காலகட்டத்தில் தமிழகத்தின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி 19,185 கோடியாகவும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் 27,141 கோடியாக இருந்துள்ளது. இதேபோல், 2020-21 ஆண்டில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூல் 17,712 கோடியாக இருந்த நிலையில் மாநில அரசின் ஜிஎஸ்டி வசூல் 28,870 கோடி ரூபாயாக இருந்துள்ளது. 2021-2022ம் ஆண்டின் நவம்பர் 23ம் தேதி வரை மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் 14,108 கோடியாகவும், மாநில வருவாய் 18,966 கோடி ரூபாயகவும் வசூலாகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜிஎஸ்டி காரணமாக ஏற்படும் மாநில அரசின் இழப்பீட்டை ஈடுகட்ட மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு வெளிசந்தையில் இருந்து மாநில அரசுகளுக்கு கடன் பெற்று தரப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *