• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கன்னியாகுமரி அருகே முதல்வரின் 72_வது அகவை விழாயொட்டி, திமுக வர்த்தகர் அணி சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
,
கன்னியாகுமரி: திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72- வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி ஒற்றையால்விளை அங்கன்வாடி மையத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், உட்பட அடிப்படை தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர்கள் ஆர்.டி.ராஜா, தங்கத்துரை ஆகியோர் தலைமை தாங்கினர்.மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் செல்வன், ஒன்றிய செயலாளர் பாபு, பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் வர்த்தகர் அணி மாநில இணைச்செயலாளர் வழக்கறிஞர் தாமரைபாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அங்கன்வாடி மைய நிர்வாகிகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ்,பேரூராட்சி கவுன்சிலர்கள் சுஜா அன்பழகன், சிவ சுடலை மணி, ராயப்பன்,ஆட்லின், நிர்வாகிகள் ஆன்சலாம், நிசார், அன்பழகன், முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.