• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அஷுதோஷ் சர்மா அதிரடியால் டெல்லி அணி த்ரில் வெற்றி!

ByP.Kavitha Kumar

Mar 25, 2025

லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அஷுதோஷ் சர்மா அதிரடியால் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்தியாவின் பீரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் டெல்லி, லக்னோ அணிகள் நேற்று இரவு மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணியில் தொடக்க வீரர் மார்க்கரம் 15 ரன்களில் ஆட்டம் இழக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ், பூரான்
ஜோடி அதிரடியாக ரன்களைக் குவித்தது.

குறிப்பாக மிச்சல் மார்ஸ் 36 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். நிக்கோலஸ் பூரான் 30 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். அதே போன்று டேவிட் மில்லர் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. டெல்லி பந்துவீச்சு தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஜேக் பிரேசர் ஒரு ரன்னிலும் அபிஷேக் போரெல் டக்அவுட் ஆகவும் சமீர் ரிஷி நான்கு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் டெல்லி அணி 7 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து டுபிளசிஸ் மற்றும் கேப்டன் அக்சர் பட்டேல் ஆகியோர் பொறுப்பாக விளையாடிய ரன்களை சேர்த்தனர். அக்சர் 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். டுபிளசிஸ் 29 ரன்களில் வெளியேற டெல்லி அணி 113 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

டெல்லி அணியின் தோல்வி உறுதி என எதிர்பார்த்த நிலையில் களமிறங்கிய அஷுதோஷ் சர்மா லக்னோவின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இவருடன் விபராஜ் நிகம் துணையாக நின்றார். இவர்கள் இருவரும் லக்னோ அணியின் பந்துவீச்சை துவைத்து எடுத்தனர். ஒரு கட்டத்தில் கடைசி மூன்று ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அஷுதோஷ் சர்மா இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 18 ரன்களை எடுத்தார். இதனால் இலக்கு 12 பந்துகளுக்கு 22 ரன்கள் என மாறியது. 19 வது ஓவரில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என டெல்லி அடிக்க கடைசி ஓவரில் வெறும் ஆறு ரன்கள் தான் தேவைப்பட்டது.இதில் மூன்றாவது பந்தில் அஷுதோஷ் சர்மா அபாரமாக அடித்த சிக்சரால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை த்ரில் வெற்றி பெற வைத்தது. இதில் அஷுதோஷ் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.