• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தாய்வழியில் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்..,

ByB. Sakthivel

Mar 24, 2025

புதுச்சேரியில் அனைத்து சாதியினருக்கும் தாய்வழியில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்

புதுச்சேரியில் தந்தையை மட்டுமே பெற்றோராக கருதி சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது, சமீபத்தில் தாயையும் பெற்றோராக கருதி, சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தாயையும் பெற்றோராக கருதி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை இதுவரை அமல்படுத்தவில்லை.

இந்த நிலையில் தாயையும் பெற்றோராக கருதி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தி, நடைபெரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இன்று புதுச்சேரி பொதுநல அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.

இதற்காக அவர்கள் ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் திடீரென்று கிழக்கு கடற்கரை சாலை ராஜீவ் காந்தி சிலை சதுக்கதிலேயே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள், இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுநல அமைப்பினர் 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.