தமிழகத்தில் அதிமுக ஆட்சி வந்தால் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு. தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது, தமிழகத்தை பட்டா போட்டு விற்று விடுவார்கள்- சிவகாசியில் நடைபெற்ற அதிமுக மகளிர் அணி மகளிர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு…சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் முதல்வர் திணறுவதாக விமர்சனம்…

சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தின விழா மற்றும் உலக மகளிர் தின விழா சிவகாசியில் உள்ள டான்பாமா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பெண்களுக்கு பரிசுகள் மற்றும் சேலைகள் வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து அவர் பேசியது சொன்னதை செய்யக்கூடியவர்கள் அதிமுக தொண்டர்கள். எப்படியாவது தில்லுமுல்லு செய்தாவது மீண்டும் வெற்றி பெற திமுகவினர் முயற்சி செய்கின்றனர். தமிழகத்தில் சண்டை சச்சரவு இல்லாத, பிரச்சனை இல்லாத எம்ஜிஆர்- ஜெயலலிதா அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் மலரச் செய்ய வேண்டும்.
நெல்லையில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் கொலை செய்யப்பட்டார். தன்னை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார் என முன்கூட்டியே அதிகாரி பாதுகாப்பு கேட்டும் தமிழக அரசு கண்டுகொள்ளாததால் அதிகாரியை இழந்து குடும்பத்தினர் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.நேர்மையான காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது

இன்றைய தினம் தமிழகத்தில் கொலை சம்பவங்களுடன் நேர்மையானவர்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகி நல்லவர்கள் வாழ்வது கேள்விக்குறியாகி உள்ளது.
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி சிங்கம் போல் கர்சிக்கிறார், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் திணறுகின்றனர். நேரடியாக விவாதத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சவால் விட்டும் ஸ்டாலின் அதற்கு பதில் கூறவில்லை.
மதுபான ஊழலில் பல லட்சம் கோடிகள் ஊழல் செய்தும் அதிகாரிகள் மீதும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மீதும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாட்டில் தீயவைகள் களைய தீயவர்களை ஒடுக்க ரவுடிசத்தை ஒழிக்க உண்மைக்கு பேர் போன தலைவன் இந்த நாட்டை ஆள வேண்டும். உழைக்கின்ற மக்களுக்கு உறுதுணையாய் இருக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி. திமுக தலைமையிலான ஸ்டாலின் குடும்ப ஆதிக்கத்தின் ஆட்சிதான் தமிழகத்தை சீரழிக்கும் ஆட்சி. இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா?

தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத வேலை வாய்ப்பு இன்றி பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை. தாய்மையை நேசிக்கும் தலைவன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வரவேண்டும். ஒரு குடும்பம் வாழ்வதற்கு தமிழகத்தை சீரழிக்கும் இந்த ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.
தமிழகத்தை ஆங்காங்கே பட்டா போட்டு விற்று விடுவார்கள் என விமர்சித்தார்…
தொடர்ந்து பேசிய அவர்,
உண்மையான பலசாலி ஆண்களை விட பெண்கள் தான். உதாரணமாக ஒரு படத்தில் கோவை சரளா- வடிவேலுவை அடி பின்னி எடுப்பார் அதனை பார்க்கும் போதே பெண்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும் என எனக் கூறியதும் கூட்டத்தில் இருந்து பெண்கள் ஆரவாரமாக கைதட்டினார்கள். முதலமைச்சராக ஜெயலலிதா அம்மா இருந்தபோது பெண்கள் அம்மாவை ரோல் மாடலாக நினைத்தனர்.
ஒன்பது மாதங்கள் விண்வெளியில் இருந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய போது கையைசைத்த படி சாதனை படைத்தது பெண்கள் தைரியசாலிகள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. பெண்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. மன உறுதியும் மன தைரியமும் பெண்களிடம் உள்ளது. எவ்வித சவால்களையும் தனிப்பட்ட முறையில் பெண்கள் சந்திக்க கூடியவர்கள்.பெண் தெய்வங்களுக்கு தான் எல்லா ஊரிலும் கோயில்கள் உள்ளன.

காளியம்மன், மாரியம்மன், துர்க்கை அம்மன் உள்பட ஏராளமான பெண் தெய்வங்கள் உள்ளன.அதிமுகவில் தேர்தல் பூத்துக் கமிட்டியிலும் பெண்களுக்கு முன்னுரிமை உண்டு. மீண்டும் தமிழகத்தில் நாம் வெற்றி பெறுவோம் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆக்குவோம் திருட்டு திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்றார். சிவகாசி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உணவு பரிமாறினார்.