மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டையம்பட்டியில் கிராமசாவடி ஒன்று கலந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது கட்டி முடிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கிராம சாவடி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.

கொண்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சில தனி நபர்கள் பொதுச்சாவடியை பூட்டி பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல் அபகரிக்க முயல்வதாக முதலமைச்சரின் தனிப்பிரிவு மதுரை மாவட்ட ஆட்சியர் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கு தொடர்ச்சியாக நாகேஸ்வரராவ் என்பவர் புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதுவரை எந்த ஒரு பதிலும் வரவில்லை பொது சாவடியை திறப்பதற்கான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகமோ காவல்துறையோ எடுக்கவில்லை. இதனால் சுமார் 5.50 லட்சம் மதிப்பில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் கட்டப்பட்டுள்ள இந்த பொது சாவடி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக குற்றம் சாட்டு கின்றனர். ஆகையால் நாலு மாதங்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ள பொது சாவடியை உடனடியாக திறக்க வேண்டும் இல்லையென்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி விரைவில் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்




