• Thu. Apr 24th, 2025

நாளுக்கு நாள் பெருகி வரும் இணையதளம் மோசடி…தப்பிய இளைஞர்!

ByKalamegam Viswanathan

Mar 21, 2025

நாடு முழுவதும் நாளுக்கு,நாள் பெருகிவரும் இணையதள சைபர் மோசடிகளால் எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் இழக்க வேண்டியது நம் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை தான்.இப்படி மோசடி அலைபேசி அழைப்பிலிருந்து ஒரு இளைஞர் எப்படி தப்பித்து இருக்கிறார்கள் என்பதை நமது அரசியல் டுடே செய்தியின் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்.

மதுரையை சேர்ந்த வினோத்குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.மனைவி அலைபேசிக்கு இன்று காலை போன் ஒன்று வந்துள்ளது. அது புதிய நம்பராக இருந்தால் உடனடியாக அவரது கணவரிடம் இது யார் என்று தெரியவில்லை பேசுங்கள் …என்று கொடுத்துள்ளார். அப்பொழுது எதிர்முனையில் நான் பேங்க் மேனேஜர் பேசுகிறேன் என ஹிந்தியும் தமிழும் கலந்து பேசி உள்ளார்.சுதாரித்துக் கொண்ட வினோத் குமார் சரி கூறுங்கள். என வினோத்குமார் சொல்ல, தங்களுக்கு ஏடிஎம் கார்டு அனுப்பி வைத்துள்ளேன். வந்துள்ளதா?என்று கேட்டு இருக்கிறார்… இல்லை என்று பதில் சொல்லவே சரி தங்களது பழைய கார்டு இருக்கிறதா? என்று கேட்டவுடன் இல்லை என்னிடம் வங்கி அக்கவுண்ட் இல்லை என்றவுடன் இணைப்பை உடனடியாக துண்டித்து விட்டார் .

இது பற்றி மேலும் விவரத்தை நம்மிடம் தாமாகவே முன்வந்து பேசிய வினோத் குமார் ..,

“சைபர் கிரைம் போலீசார் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் எனது அக்கவுண்டில் இருக்ககூடிய 100 அல்லது 200 ரூபாயும் தப்பியது எனவும் நாம் விழிப்புணர்வாக இல்லா விட்டால் நம்ம பணம் இழக்க வேண்டியது தான்” என கூறினார்.

இது பற்றி வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில்…

மோசடி‌ நபர் பேசிய ஆடியோ,

“மோசடிகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. பொதுமக்கள் ஏதாவது பேங்க் சம்பந்தமாக யாரும் தொலைபேசியில் அழைத்தால் நீங்கள் நேரடியாக பேங்குக்கு சென்று தங்களது கணக்கு விவரங்களை தெரிவியுங்கள். தொலைபேசி வாயிலாக யார் கூறினாலும் ஓடிபி மற்றும் தங்களது ஏடிஎம் அட்டையில் உள்ள 16 இலக்கு நம்பரை எக்காரணம் கொண்டும் மற்றவர்களிடம் கூற வேண்டாம் என வங்கி மேலாளர் நம்மிடம் தெரிவித்தார்.

மதுரை இளைஞர் விழிப்போடு இருந்ததால்தான் பணம் பறி போகாமல் தப்பித்தது. நீங்களும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.