அமைச்சருக்கு மலர் தூவி, காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த நெகிழ்ச்சி சம்பவம்..
புதுச்சேரி கல்வித்துறையில் கடந்த 2003-ம் ஆண்டு ரொட்டி பால் தொடங்கப்பட்டது.இதற்காக 950 ஊழியர்கள் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்தபட்டனர்.

இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி 2023-ம் ஆண்டு ரொட்டிப்பால் திட்ட ஊழியர்களுக்கு சம்பளம் 10 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட 18 ஆயிரம் ரூபாய்க்கு சம்பள உயர்வு ஆணை வழங்கும் நிகழ்வு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி ரொட்டி பல் ஊழியர்கள் சிலருக்கு சம்பள உயர்வுக்கான ஆணையை வழங்கினார்.

தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடந்து கொண்டிருப்பதால் ஊழியர்கள் அனைவரையும் சட்டமன்றத்திற்குள் அனுமதிக்கவில்லை இதனால் ஊழியர்கள் அனைவரும் சட்டமன்ற வெளியே காத்திருந்தனர்.
தகவல் அறிந்து பேரவையில் வெளியேறி சட்டமன்றம் அருகே காத்திருந்த இடத்திற்கு சென்ற கல்வித்துறை அமைச்சர் மற்ற ஊழியர்களுக்கு ஆணை வழங்கினார். அப்பொழுது ஊழியர்கள் அமைச்சருக்கு மலர் தூவி வரவேற்று அவரது கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க நன்றியையும் தெரிவித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)