• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக் குருவியை பாதுகாக்க கோவையில் பேரணி !!!

BySeenu

Mar 20, 2025

அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக் குருவிகளை பாதுகாக்க வேண்டும் ஒரு காலத்தில், சிட்டுக் குருவிகள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளாக இருந்தன. அவற்றின் இனப்பெருக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது சிட்டுக் குருவிகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. இதனால், சிட்டுக் குருவிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு, நேச்சர் என்விரான்மென்ட் சர்வீஸ் டிரஸ்ட் (NEST) மற்றும் தமிழ்நாடு வனத் துறை ஆகியவை இணைந்து விழிப்புணர்வு பேரணியை கோவையில் நடத்தின. இந்த பேரணி, கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி மண்டல மையத்திற்கு அருகில் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் டி. வெங்கடேஷ் IFS ஆகியோர் இந்த பேரணியை தொடங்கி வைத்தனர். மேலும், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் கோவை நகர போக்குவரத்து துணை ஆணையர் அசோக் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில், சிட்டுக் குருவிகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு சிட்டுக் குருவிகளுக்கான தீவனப் பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த பேரணியில், ஏராளமான பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியின் மூலம், சிட்டுக் குருவிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.