மதுரை வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு பகுதியில் கடந்த 16ஆம் தேதி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஆட்டோ இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை குடிபோதையில் இளைஞர்கள் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் மதுரை ஜெய்ஹிந்திபுரத்தைச் சேர்ந்த அன்புராஜ் என்பவரது மகன் வீரபாண்டி 25 சீனிவாச பெருமாள் என்பவரது மகன் சூர்யா வயது 22 ஆகியோரை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டபோது வீரபாண்டி மற்றும் சூர்யா ஆகியோர் காவல் துறையினரிடம் இருந்து தப்பித்து பாழடைந்த வீட்டிற்கு அருகே இருந்த சுற்றுசுவர் வழியாக ஏறி குதித்து தப்பிக்க முயற்சி செய்தபோது வீரபாண்டிக்கும் சூர்யாவிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது .
மேலும் இருவரையும் மருத்துவ சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நீதிமன்றம் மூலம் காவல் அடைப்பு செய்தும், இவ்வழக்கில் மேலும் இரண்டு இளம்சிறார்கள் கூர்நோக்கு இல்ல பாதுகாப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.