• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக் கடையில் இது அப்பா கடை என்ற வாசகம் எழுதப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் படம் பாஜக பரபரப்பு…

ByS.Navinsanjai

Mar 20, 2025

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி 18 வது வார்டு கவுன்சிலரும் மாவட்ட தரவுதள செயலாளாருமாக பாஜகவை சேர்ந்த சசிரேகா ரமேஷ் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் திமுக அரசு டாஸ்மாக் ஊழலை செய்ததாக தெரிவுத்தும் அதனை எதிர்த்தும் பாஜகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று பாஜக வார்டு கவுன்சிலரும் தரவுதள மாவட்ட செயலாளருமான சசிரேகா ரமேஷ் பல்லடம் தாராபுரம் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையின் முன்பு இது அப்பா கடை என்ற வாசகம் எழுதிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் படம் பதிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றை கட்டி தொங்க விட்டார்.

மேலும் டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக தான் இந்த போஸ்டரை கட்டியுள்ளதாகவும் எல்லா அரசு அலுவலகங்களிலும் முதல்வர் படம் உள்ள நிலையில் தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் கடையிலும் முதலமைச்சர் படம் வைக்க வேண்டும் என இந்த போஸ்டரை கட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.