• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சிவசேனா தலைவர் ராஜனின் மகன் போக்சோ சட்டத்தில் கைது

குமரி சிவசேனா தலைவர் ராஜனின் மகன் வழக்கறிஞர் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக பாலியல் வழக்குகள் அதிக அளவில் காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்..,

குமரி மாவட்ட சிவசேனாவின் தலைவர் ஏ.பி.ராஜனின் மகன் வழக்கறிஞர் அஜித் குமாருக்கு (மார்ச்16)ல் திருமணம் நடக்க இருந்த நிலையில், கடந்த 15-ம் தேதி பள்ளி மாணவிகள் சகோதிரிகள் இருவரை கடத்தியது மற்றும் சகோதிரிகளில் மூத்தவர் (8ம்) வகுப்பு மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அஜித்குமார் கழிவறையில் வழிக்கு விழுந்து, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அஜித்குமாருக்கு ஆதரவாக, தக்கலை நீதிமன்ற வழக்கறிஞர்கள் 20_க்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டு வந்ததால், மருத்துவமனை வளாகத்தில் காவல்துறை பெரும் எண்ணிக்கையில் குவிப்பு.

இரண்டு மாணவிகள் மூன்று நாட்களுக்கு முன் காணாது போன புகாரின் அடிப்படையில் காணாது போன மாணவிகளை காவல்துறை தேடி வந்த நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அஜித்குமாரின் பைக்கில் இரண்டு மாணவிகளை அழைத்து வந்து, சாலை ஓர கடையில் டீ குடித்து சென்றது காவல்துறை கண்ணில் பட மாணவிகளை காவல்துறை வேறு கோணத்தில் தேடி கண்டுபிடித்தது.

வழக்கறிஞர் அஜித்குமார் இரண்டு மாணவிகளுடன் எங்கெல்லாம் பயணித்தார் என்பதை காவல்துறை பதிவு செய்தது, இந்த வழக்கின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு குறித்து காவல்துறையின் விசாரணை வேகமெடுத்துள்ளது.