விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தில் கபடி போட்டியை ஊக்குவிப்பதற்காக முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கபடி குழுவினர் கோரிக்கை ஏற்று கபடி போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக சென்றார்.


அப்போது கபடி வீரர்களுக்கு தேவையான போதிய உபகரணங்கள் இல்லாதது தெரிந்து கொண்டார். ரூபாய் 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.


விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு காளியம்மன் கபடி குழுவினர் மற்றும் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






