அதிமுகவில் இளைஞர்கள் இளம்பெண்கள் அதிக அளவில் உள்ளனர். இந்தியாவில் முதல்முறையாக எடப்பாடியார் வீடியோ கான்பரன்ஸில் கிளை செயலாளர்கள், ஒன்றிய, பேரூராட்சி, நகர செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்களை ஒரே நேரத்தில் சந்திக்கக்கூடிய தலைவராக உள்ளார் . மூன்று பெண்கள் கொண்ட பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் வீடியோ கான்பரன்சில் அதிகமா பொதுச் செயலாளர் எடப்பாடி இடம் சந்திக்கும் போது, பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 275 பூத்துகள் உள்ளன. கட்சி நமக்கு என்ன செய்தது என நினைக்க வேண்டாம். கட்சிக்கு நாம் என்ன செய்தோம் என நினைக்க வேண்டும். என் மீது பல வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று கூட டெல்லியில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



ஆனால் நான் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. என்னை தேடி சிபிஐ, சிபி சிஐடி, என யார் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். எனக்கு பயம் கிடையாது. தயக்கம் கிடையாது. புரட்சித்தலைவி அம்மா காட்டிய வழியிலும் எடப்பாடியார் எனக்கு அமைப்புச் செயலாளர் பதவி தந்துள்ளார். அதனை வைத்து கட்சி பணியாற்றுகிறேன் கட்சி வென்றாலும், தோற்றாலும் அதிமுகவில் தான் இருக்கிறேன். குறுநில மன்னர் போல் இருப்பது இல்லை. மா.பா. பாண்டியராஜன் பாஜக, தேமுதிக, அதிமுக , ஓபிஎஸ் அணி என பல்வேறு கட்சிக்கு சென்று விட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக தொண்டர்களை பற்றி எனக்கு தெரியும். தொண்டர்களின் பெயர்களை எனக்கு தெரியும் எனக் கூறியவர் சிறிது நேரம் முயற்சி கூட்டத்தில் இருந்த பெண்கள், ஆண்கள் என 30க்கும் மேற்பட்ட பெயர்களை கூறியதால், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.


ஆனால் அதிமுக கட்சியினர் யாரென்று தெரியாத ஒரு நபர் அதிமுகவில் இருந்து வருகிறார். என் மீது பல்வேறு வழக்குகள் இருந்தாலும் யார் காலில் விழுந்து என்னை காப்பாற்றுங்கள் என கெஞ்சியது கிடையாது .நாடி நரம்பெல்லாம் அதிமுக ரத்தம் ஓடுகிறது. மூன்றாவது அத்தியாயம் விரைவில் எழுத எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் என் மீது அம்புகள் யார் வேண்டுமானாலும் வீசட்டும் ஆனால் தொண்டர்கள் மீது மலர்கள் விழுவதற்கு எடப்பாடியார் இருக்கிறார் .அதை நாம் உணர வேண்டும் அதிமுகவில் சாதி கிடையாது சமதர்ம சமூக உள்ள கட்சி அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் வீழ்வார்கள். நீ செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க நான் ஒன்று பைத்தியக்காரன் அல்ல தொலைத்து விடுவேன் என்றும் நான் அதிமுகவில் குறுநில மன்னர் தான் எனக்கு பின்னால் உள்ள அதிமுக தொண்டர்கள் வாழ் ஏந்திய படை வீரர்கள் என்றும் என்னைப் பற்றி விருதுநகரில் வைத்து உன்னால் பேச முடியுமா என்றும் மாஃபா பாண்டிராஜனுக்கு ராஜேந்திரபாலாஜி சவால் விடுத்துள்ளார்.


இபிஸ்க்கு எதிராக யார் அரிவால், துப்பாக்கி, தூக்கி வந்தாலும் எதிர்த்து நான் நிற்பேன் உன்னால் முடியுமா அதிமுகவிற்கு உள்ளேயும், வெளியையும் இருந்து இபிஎஸுக்கு குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. பல கட்சிக்கு சென்று விட்டு வந்த மா.பா. பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் நிர்வாகி கன்னத்தில் நான் அறைந்தேன். மாவட்டச் செயலாளரான நான் இருக்கும்போது மாபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டு விடுவேனா என்று கூறினார்.
