• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தொடர் மழையால் 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ள பாசன ஏரிகள்

Byகாயத்ரி

Nov 26, 2021

கொட்டித்தீர்த்த மழையில் தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 பாசன ஏரிகளில் 7,123 ஏரிகள் முழுகொள்ளளவான 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான அணைகள், நீர்த்தேக்கங்கள், பாசன ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எப்போதுமே வறண்டு காணப்பட்ட பாலாற்றில், தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மிக பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் பாசன ஏரிகள் குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,

தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 பாசன ஏரிகளில் 7,123 ஏரிகள் முழுகொள்ளளவான 100 சதவீதம் நீர் நிரம்பின. தமிழ்நாட்டில் 3,185 பாசன ஏரிகள் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.1,578 பாசன ஏரிகள் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நீர் நிரம்பியுள்ளன. குமரி 603, செங்கல்பட்டு 517, கடலூர் 194, கள்ளக்குறிச்சி 312, காஞ்சிபுரம் 341, திண்டுக்கல் 77, அரியலூர் 58 ஏரிகள் நிரம்பின.திருவண்ணாமலை 663, தஞ்சை 434, தென்காசி 447, புதுக்கோட்டை 413, திருவள்ளூர் 425, நெல்லை 355 ஏரிகள் நிரம்பின.விழுப்புரம் 417, ராணிப்பேட்டை 280, சிவகங்கை 231, தூத்துக்குடி 155, நாமக்கல் 28, பெரம்பலூர் 55 ஏரிகள் நிரம்பின.

தமிழகத்தில் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வருகிறது. இவை கோடை காலத்தில் மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.