• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

ட்விட்டரில் மாணவருக்கு ஆட்சியர் கலகல பதில்

Byமதி

Nov 26, 2021

முன்பு எல்லாம் தொடர் மழை பெய்கிறது என்றால், பள்ளிக்கு phone செய்து இன்று பள்ளி விடுமுறையா என்று பெற்றோர்கள் விசாரிப்பார்கள். ஆனால், தற்போது எல்லாம் நேரடியாக கலெக்டரிடமே மாணவர்கள் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பள்ளி மாணவர்களிடம் அதிகமாகி வருகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு தான் தற்போது நடந்துவருகிறது.

அப்படி ஒரு சம்பவம் தான் திருவாரூரில் நடந்துள்ளது. மழை காரணமாக நாளைய தினம் திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த செய்தியை மாணவர் ஒருவர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகானந்த் ரெட்டியையும் ‘டேக்’ செய்து “சார், விருதுநகரிலும் கனமழை பொழிந்து வருகிறது” என சொல்லி இருந்தார்.

அதை கவனித்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகானந்த் ரெட்டி, “விடுமுறை வேண்டி உங்கள் தொடர் பிரார்த்தனைகளுக்கு நன்றி. நம் மாவட்டத்திலும் அதிக மழை பொழிவு இருந்து வருகிறது தம்பி. அதனால் நாளை (26.11.21) மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை பயன்படுத்தி ஹோம்வொர்க்கை முடிக்கவும். ஆசிரியர்கள் சரிபார்ப்பார்கள். பாதுகாப்பாக இருங்கள்” என சொல்லி அதற்கு ரிப்ளை கொடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் ரிப்ளை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.