• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொட்டும் மழையில் உயிரிழந்தவரின் உடலை எரிக்கும் அவலம்

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளாக மயானத்தின் மேல்கூரை கீழே விழுந்த நிலையில் கிராம பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் மயானத்தின் மேல் கூரை அமைக்க பலமுறை கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இன்று கண்ணழகு என்பவரின் மனைவி நல்லம்மாள் மரணம் அடைந்த போது, அந்த மயானத்தில் மேற்கூரை இல்லாததால், அவரது உறவினர்கள் கொட்டும் மழையில் நல்லம்மாள் உடலை எரியூட்டிய அவலம் நடைபெற்றது.