கொடைக்கானல் சோதனை சாவடி அருகே வனப்பகுதியில் உள்ள ஆற்று கரையோர பகுதியில் சுமார் 65 வயதுள்ள ஆண் மற்றும் பெண் சடலம் மீட்பு, காவல் துறையினர் விசாரணை…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடி அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள ஆற்று கரையோர பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் 65 வயதுள்ள ஆண் மற்றும் 55 வயதுள்ள பெண் சடலமாக காணப்பட்ட நிலையில், கொடைக்கானல் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த இருவரும் கணவன் மனைவியாக இருக்கலாம் என்றும் பூச்சி கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இறந்தவரின் பாக்கெட்டில் 9580 ரூபாய் பணம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை தங்களின் ஈமை காரியம் செய்ய பணத்தை தனது பாக்கெட்டில் வைத்திருக்கலாம் எனவும் தெரியவருகிறது.
மேலும் இறந்தவர்கள் குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.