



பழனி அருகே கள்ளத்துப்பாக்கியுடன் கேரளா வாலிபர்கள் 4 பேர் உட்பட 7 பேர் கைது செய்து, 1 நாட்டு துப்பாக்கி ,6 தோட்டாக்கள் ,கேரள பதிவெண் கொண்ட இரண்டு கார்கள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலை மேற்கு தொடர்ச்சி மலையாக உள்ளதால் ஏராளமான மான் ,காட்டு பன்றி , யானை ,காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கொடைக்கானல் சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறை இண்டு கார்களில் 7 பேர் நின்று உள்ளனர். அப்போது வனத்துறையினர் ரோந்து சென்றவர்கள் 7 பேரையும் விசாரித்துள்ளனர். கள்ளத் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த ஆயக்குடியை சேர்ந்த ஷேக் அப்துல்லா (41) ,பேச்சிமுத்து (27), கர்ணன் (30) மற்றும் கேரளாவைச் சேர்ந்த முகமது ரபிக் (43), நெகாஸ் (32) ,அப்துல் லத்தீப் (55) முஸ்தபா (55) ஆகிய ஏழு பேரை வனத்துறையினர் பிடித்து அவர்களிடம் இருந்த ஒரு கள்ளத்துப்பாக்கி 6 தோட்டாக்கள் , இரண்டு கார்களையும் பறிமுதல் செய்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து பழனி அடிவாரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட கொண்டு வந்தது தெரியவந்ததை யடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . பழனி கொடைக்கானல் சாலையில் கள்ளத் துப்பாக்கி மற்றும் கேரள வாலிபர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டும் இரண்டு கேரளா பதிவெண் கொண்ட கார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


