• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி

ByT. Vinoth Narayanan

Feb 8, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் பிச்சை மணி, பொறியாளர் கோமதி சங்கர், சுகாதார அலுவலர் கந்தசாமி, நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன் உட்பட நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி

“இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும், நான் உளமார உறுதி கூறுகிறேன்”. என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.