ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய குடிநீர் வாகனத்தை நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இங்கு ஒரு லட்சத்திற்கு அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் இருந்து பள்ளிகள், சத்துணவு மையங்கள், அரசு மருத்துவமன, நீதிமன்ற வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பொதுமக்களின் அவசரத் தேவைக்கும் நகராட்சியில் இருந்து குடிநீர் வாகனம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பழைய நகராட்சி குடிநீர் வாகனம் 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டு, பழுதடைந்ததால் புதிதாக குடிநீர் வாகனத்தை நகராட்சியில் இருந்து ரூபாய் 19 லட்சம் செலவில் வாங்கப்பட்டது. இதனை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பிச்சை மணி, பொறியாளர் கோமதி சங்கர், நகர் நல அலுவலர் கந்தசாமி, நகர் அமைப்பு அலுவலர் வெங்கடேசன், குடிநீர் விநியோக மேற்பார்வையாளர் ஜெயராஜ், சுகாதார ஆய்வாளர் சந்திரா, மேலாளர் பொறுப்பு நாகசுப்பிரமணியன் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)
