நைஜீரியாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 17 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் உள்ளஜம்ஃபாரா மாநிலத்தின் கௌரா நமோடா மாவட்டத்தில் இஸ்லாமிய மாணவர்கள் படிக்கும் மதப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வந்தனர். இந்த நிலையில் விடுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது தீயில் மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை ணைக்கும் பணியில் ஈடுபட்டன. அவர்களுடன் வந்த மீட்புக்குழுவினர் தீயில் சிக்கிய மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் எப்படி தீ பிடித்தது என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுமபங்களுக்கு நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர் பள்ளிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.