• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கிளாம்பாக்கத்தில் இளம்பெண் கடத்தல்: அண்ணாமலை கண்டனம்

ByP.Kavitha Kumar

Feb 5, 2025

கிளாம்பாக்கத்தில் இளம்பெண் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர், கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் என்டிபிஎஸ் ( NDPS) வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,122 மட்டுமே; கடந்த 2021-ம் ஆண்டில் என்டிபிஎஸ் (NDPS) வழக்குகளில் மொத்தமாக 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா & மெத்தபெட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது; ஆனால் கைதுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எப்படி? போதைப்பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடமாடவிட தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே அலட்சியம் காட்டுகிறதா? நமது சகோதரிகள் நடமாட பாதுகாப்பான வீதிகளைக் கொடுப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.