• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

60 அடியாக ரோடாக ஆக்கிரமித்த மாநகராட்சி

Byஜெ.துரை

Jan 31, 2025

சுடுகாட்டுக்கு செல்லும் 6 அடி பாதை அருகிலுள்ள குளத்த ஆக்கிரமித்து 60 அடியாக ரோடாக ஆக்கிரமித்த மாநகராட்சி

திருச்சி பொன்மலை மேலகல்கண்டார் கோட்டை தலித் மக்கள் வாழும் பகுதியில் உள்ள தட்டான் குளம் காணாமல் போகும் நிலையில் உள்ளது.

சிறிது, சிறிதாக ஆக்கிரமிக்கபட்டு தற்போது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இப்படியே போனால் ஒரு பெரும் மழை வந்தால் தலித் மக்கள் வாழும் பகுதியான கணேஷ்நகர் மற்றும் சாமிநாத நகர் ஆகிய பகுதியில் வசிக்கும் சுமார் 500 குடும்பங்கள் குளத்து நீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் தண்ணீர் புகும் சூழல் உருவாகும்.

தட்டான்குளம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை முழு குளமாக இருந்தது.

மையானத்திற்கு சாலை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாநகராட்சி 6 அடியில் ரோடு அனுமதி வழங்கியது.

அனுமதி கிடைத்த பிறகு மொராய் சிட்டி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

தற்போது இந்த 6 அடி வழி போதாது என்று தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் அழுத்தத்தின் காரணமாக மாநகராட்சி தற்போது 6அடி சாலை அருகே குளத்தை ஆக்கிரமித்து 60 அடியாக ஆக்கிரமித்துள்ளது.

இன்னும் சிறிது நாட்களில் இந்த குளம் முழுமையாக மூடப்பட்டால் ஒரு பெருமழை வந்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் தலித் மக்களின் வீட்டிற்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.