• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மகா கும்பமேளாவில் இன்று முதல் விவிஐபி பாஸ்கள் ரத்து – உ.பி முதலமைச்சர் அதிரடி உத்தரவு

ByP.Kavitha Kumar

Jan 30, 2025

மகா கும்பமேளாவில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில், பிரயாக்ராஜில் இன்று முதல் விவிஐபி எனப்படும் அதி முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசு நிர்வாகச் சீர்கேடு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். விஐபி கலாச்சாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும், மேலும், பொது பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் சிறந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று பின்னிரவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காவல் துறை உயர் அதிகாரிகள், பிரயக்ராஜ், கவுசாம்பி, வாரணாசி, அயோத்தி, மிர்சாபூர், பஸ்தி, ஜவுன்பூர், சித்ரகூட், பண்டா, அம்பேத்கர்நகர், பிரதாப்கர், சண்ட் கபீர் நகர், படோடி, ரே பரேலி, கோரக்பூர் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருடன் காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இதன் அடிப்படையில் பிரயாக்ராஜில் இன்று முதல் விவிஐபி எனப்படும் அதி முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குதலை ரத்து செய்ய யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் சில வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கும் படி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, உத்தரப் பிரதேச மாநில எல்லைகளில் ‘பார்டர் பாயிண்ட்ஸ்’ அமைத்து அங்கேயே திரளும் கூட்டத்தை ஒழுங்கபடுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் இருந்து வெளியே வரும் வாகனங்கள் எந்த நெரிசலிலும் சிக்கிக் கொள்ளாமல் தங்குதடையின்றி வெளியேற போதிய ஏற்பாடுகளைச் செய்யும்படியும் வலியுறுத்தியுள்ளது. மகா கும்பமேளா பகுதிக்குக்குள் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. இதன் மூலம் கூட்டத்தை நிர்வகிக்கலாம். விஐபிக்களின் பாஸ்கள் ரத்து செய்யலாம். பிப்ரவரி 4-ம் தேதி வரை பிரயாக்ராஜ் மாவட்டத்துக்குள் 4 சக்கர வாகனங்கள் உரிய அனுமதியின்றி வருவதை தடுக்கவும்.

புனித நீராடலை முடித்துவிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பொருட்டு ரயில் நிலையங்களில் திரளும் கூட்டத்தையும் முறையாக நிர்வகிக்க வேண்டும், இதில் பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர், ஏடிஜிபி ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூட்டத்துக்கு ஏற்ப கூடுதல் பேருந்து, ரயில் சேவைகளை உறுதிப்படுத்த வேண்டும். பிப்ரவரி 3-ம் தேதி வசந்த பஞ்சமி நாளில் அம்ரித் ஸ்னாந் நிகழ்வு நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை காவல்துறை டிஜிபியும், தலைமைச் செயலரும் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.