• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பேராசிரியர்களை பழிவாங்கும் மதுரை காமராசர் பல்கலை நிர்வாகம்

ByKalamegam Viswanathan

Jan 29, 2025

பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தும், பெண்கள் கல்வி பயிற்று மைய பேராசிரியர்களை பழிவாங்கும் மதுரை காமராசர் பல்கலை நிர்வாகம்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் பயிற்று ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மகளிர் ஆய்வு மையம் 2009 ஆம் ஆண்டு முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ஆய்வு மையத்திற்கான ஆசிரியர்கள் பணி நியமனம் 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த நிதியாண்டுக்கான ஆசிரியர்கள் சம்பளத்தை பல்கலைக்கழக மானிய குழு பல்கலைக்கழக பதிவாளருக்கு அனுப்பிய நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி மகளிர் ஆய்வு மைய ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பணி நியமனம் செய்யப்பட்ட ஆண்டிலிருந்து இயக்குனர் பதிவாளர் இடமிருந்து முன்பணமாக பெற்று சம்பளம் வழங்குமாறு கூறியிருந்தார்.

அதுதான் வழக்கத்தில் இருந்தது ஆனால் சமீபத்தில் முன்பணம் கொடுப்பதற்கு தணிக்கையாளர் குழு மறுப்பு தெரிவித்து பல்கலைக்கழகமே சம்பளத்தை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது உள்ள பதிவாளர் அந்த சம்பளத்தை எங்களுக்கு வழங்க மறுத்து எங்கள் மீது வன்மத்தை காட்டி வருகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

பெண்களின் சமூக பொருளாதாரம்,கல்வி ,மேம்பாடு மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கான இந்த பெண்கள் ஆய்வு மையத்தின் நோக்கம் என்றும் கருத்தரங்கம் ஆய்வுகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி அரசின் கொள்கை முடிவுகள் எடுப்பதற்காக அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூட கையெழுத்திட மறுக்கிறார்கள்.

எனவே பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு பெண்கள் மேம்பாடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றி துறையும் அக்கரை இல்லை என்று குற்றச்சாற்று வைத்ததோடு உடனடியாக பல்கலைக்கழக கணக்கில் இருந்து நிலுவையில் உள்ள ஆறு மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.