• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு

ByT. Vinoth Narayanan

Jan 25, 2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் 15 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு பேரணியானது திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சன்னதியில் இருந்து நான்கு ரத வீதிகளிலும் சென்று முடிவு பெற்றது. பேரணியினை உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி தலைமையில் வருவாய் வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் முன்னிலையிலும் தொடங்கப்பட்டது.

இப்பேரணியில் கு.ச இந்து மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் வருவாய்த்துறை அலுவலர்களும் நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதாரப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.