• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இனி பிக்பாஸ்-க்கு இவர் தான் தொகுப்பாளர்…

Byகாயத்ரி

Nov 23, 2021

கொரோனா தொற்று காரணமாக நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


காதி துணிகளை அறிமுகம் செய்ய அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.சிகாகோ சென்றுவந்ததும் கடந்த சனி, ஞாயிறு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் சனிக்கிழமையன்று பங்கேற்றார். அதன் பிறகே கொரோனா பாதிப்பு தெரிய வந்ததாகச் சொல்லப்படுகிறது.


தற்போதிருக்கும் நிலையில் அடுத்த 2 வாரம் கமல்ஹாசன் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கமலால் தொகுத்து வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், வரும் வாரம் கமலுக்கு மாற்று ஏற்பாடாக ஸ்ருதிஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கில், நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதேபோல இடையில் ஓரிரு வாரங்கள் அவர் பிக் பாஸ் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.


அப்போது அவருக்குப் பதிலாக அவரது முன்னாள் மருமகள் சமந்தா அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதற்குப் பிறகு, மீண்டும் நாகார்ஜுனா வந்து தொகுப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இதே பாணியைப் பின்பற்றி, கமலின் மகளான ஸ்ருதிஹாசன் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.