சிவகங்கை நகராட்சியில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் பொங்கல் விழா கொண்டாட்டம்!
சிவகங்கை நகராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் அவரது துணைவியாருடன் கலந்துகொண்டு பாரம்பரிய உடையணிந்து பொங்கல் விழா கொண்டாடினர். நகராட்சி ஊழியர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாரம்பரிய முறையில் வேஷ்டி, சேலை அணிந்து சமத்துவ பொங்கலிட்டனர்.

நகராட்சி வளாகம் முழுவதும் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டது. மேலும் நகராட்சி ஊழியர்கள் விளையாட்டு மற்றும் பானை உடைப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் நகர் மன்றம் உறுப்பினர்கள், நகராட்சி ஆணையாளர், நகராட்சி சுகாதார அலுவலர், நகராட்சி பொறியாளர், நகராட்சி அலுவலர்கள் , DBC டெங்கு பணியாளர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் சிறப்பித்தனர்.

