• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னையில் போகிப் பண்டிகை புகை, பனிமூட்டத்தால் விமானங்கள் ரத்து!

ByP.Kavitha Kumar

Jan 13, 2025

சென்னையில் போகிப் பண்டிகை புகை, பனிமூட்டம் எதிரொலியாக 30 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, பெங்களூருவில் இருந்து அதிகாலை சென்னை வரவேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு போகிப் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகிப் பண்டிகையை வரவேற்று வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. பழையப் பொருட்களை மக்கள் எரித்து வருவதால், பனியுடன், புகையும் கலந்து
புகைமூட்டமாக உள்ளது. இதனால் சென்னையில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்

இந்நிலையில் போகிப் பண்டிகை புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, பெங்களூரில் இருந்து, இன்று அதிகாலை சென்னை வர வேண்டிய 3 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.