நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன மகேஷ் தலைமையில், தமிழக சட்டசபையில் புதிய ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்ற பாரம்பரியம் மரபின் படி,
புத்தாண்டின் முதல் கூட்டத்திற்கு, தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு நேற்று முன்தினம் (ஜனவரி_4)ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரிடம் நோரக சட்டமன்ற தீர்மானங்களை கொடுத்து அப்பாவு அழைத்தார்.
ஆளுநர் நேற்று (ஜனவரி_6)ம் தேதி சட்டமன்ற கூட்டத்திற்கு வந்ததும் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அடுத்து ஆளுநர் உரை நிகழ்த்துவார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ் தாயை தொடர்ந்து உடனே தேசிய கீதமும் பாட வேண்டும் என்றதும். சட்டப் பேரவை தலைவர் அப்பாவு இது மரபு அல்ல ஆளுநர் உறை வாசித்தப் பின்னே தேசிய கீதம் பாடப்படும் என தெரிவித்தார். சட்டப் பேரவை தலைவர் பேச்சை சற்றும் மதிக்காமல் ஆளுநர் வேக, வேகமாக சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு உரையை விசித்து சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்ந்தும். எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல் பட்டதும், சட்டசபை காவலர்கள் அதிமுக உறுப்பிகளை அவையை விட்டு வெளியேற்றினார்.
ஆளுநர் செயலை கண்டித்து இன்று, தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைமை ஆணையிட்டதை தொடர்ந்து,

நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் ஆன மகேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குமரி மாவட்ட அறக்கட்டளைகள் குழுவின் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், வழக்கறிஞர். பாலஜனாதிபதி கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.
