பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கிட வலியுறுத்தியும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை வலியுறுத்தி சிவகங்கையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழகத்தில் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்திடவேண்டும்.

புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். கஞ்சா மற்றும் மதுபோதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பெண்கள் மற்றும் பள்ளி முதல் கல்லூரி வரை மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என
தமிழக அரசை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த 200க்கும் மேற்ப்பட்டோர் சிவகங்கை கோர்ட் வாசல் அருகே மாவட்டச் செயலாளர் திருவேங்கடம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அருணா கண்ணன், மாவட்ட பொருளாளர் துரை பாஸ்கரன், மாவட்ட துணைச் செயலாளர் ஞானமுத்து, சிவகங்கை நகரச் செயலாளர் தர்மராஜ், அவைத் தலைவர் மாரி, மாநில பொதுக்குழு உறுப்பினர் தனசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர் மாயழகு, மாவட்ட வழக்கறிஞர் செயலாளர் சௌந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர் தர்மராமு, விஜய மூர்த்தி, தமிழ் முருகன், காந்தி, சிவா, அலாவுதீன், அழகு மற்றும் மாவட்ட கேப்டன் மன்றம் வன்னிமுத்து, கார்த்திக், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலகுரு,,மாதவன் ,ஜாபர் அலி, சண்முகம் , சீனி, மற்றும் கண்ணன் ஈஸ்வரன், பாத்திமா, கவிதா, பானு, ராஜ்குமார், தர்மா உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

