• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நேரு யுவகேந்திரா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

ByG.Suresh

Jan 6, 2025

நேரு யுவகேந்திரா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குனர் செந்தில்குமார் பரிசுகள் வழங்கினார்.

சிவகங்கை இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், நேரு யுவ கேந்திரா சிவகங்கை, நேரு இளையோர் மன்றம் சார்பில் ஒக்கூர் அண்ணா நகர் பகுதியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இந்த விளையாட்டு போட்டியில் கைப்பந்து, கயிறு இழுத்தல், ஒற்றை சிலம்பம், 100 மீட்டர் ஓட்டம் என 250க்கும் மேற்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள்
கலந்து கொண்டனர் , நேரு யுவகேந்திரா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குனர் செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கர், மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார்.

தென்றல் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் எம்.ஹரிஹரன், புனித மைக்கேல் பாலிடெக்னிக் முதல்வர் என்.மகேந்திரன், நேதாஜி இளையோர் கழக தலைவர் சரவணன், பா.ஜ., சார்பில் பிரதிநிதி பால முருகன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம். சான்றுகள் வழங்கினர். திட்ட உதவி யாளர் எஸ்.ராஜேஸ்வரி நன்றி கூறினார்.மற்றும் பொதுமக்கள் இளைஞர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

முதல் இரண்டு இடத்தை பிடித்தவர்களுக்கு வெற்றிக் கோப்பைகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும், இதில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.