• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பட்டா வழங்கிட கோரி குடியேறிய பொதுமக்கள்

ByKalamegam Viswanathan

Dec 30, 2024

வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் தலைமையில் பட்டா வழங்கிட கோரி குடியேறிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு குடியிருக்க வீடு இல்லை என்று வீட்டு மனை பட்டா கேட்டு மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை வழங்காததை கண்டித்தும், இது குறித்து பலமுறை அதிகாரிகளை சந்தித்தும் பட்டா கிடைக்கவில்லை, முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்கவில்லை என கோரியும், கொண்டையம்பட்டி கிராமத்தில் நத்தம் புறம்போக்கு நிலம் இருந்தும் பட்டா வழங்காததை கண்டித்தும், பட்டா கேட்டு போராடிய மக்களை அலைக்கழிக்கும் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை கண்டித்தும் பட்டா கேட்டு மனு அளித்து காத்திருக்கும் கொண்டையம்பட்டி ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கிடக் கோரியும், வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கொண்டையம்பட்டி மக்கள் முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் வி.உமா மகேஸ்வரன், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் கே.தவமணி, ஒன்றிய குழு உறுப்பினர் பி.பஞ்சாட்சரம், கிளைச் செயலாளர் எம்.கோவிந்தராஜ், மற்றும் மணல் பாண்டி, எம்.மாரியப்பன்,கே. தனம் உட்பட பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்