கூடலூர் நகராட்சி பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி பெண்களிடம் 6 கோடி ரூபாய் மோசடி. தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கூடலூர் நகராட்சி பகுதியில் ஏராளமான பெண்களிடம் தீபாவளி சீட்டு நடத்தி 6 கோடி ரூபாய் மோசடி நடைபெற்று உள்ளது.
கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள ஏராளமான பெண்களிடம் தீபாவளி சீட்டு முருகன் மனைவி சண்முகப்பிரியா நடத்தி உள்ளனர். தீபாவளி சீட்டு கட்டியவர்கள் தீபாவளிக்கு சீட்டு பணம் கேட்டபோது, பணத்தை தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.
இதனால் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் சீட்டு கட்டி ஏமாந்த பெண்கள் புகார் தெரிவித்தனர். புகார் தெரிவித்து பெண்களுக்கு இதுவரை தேனி மாவட்ட காவல்துறை பணத்தை மீட்டு தரவில்லை.
இதனால் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மீட்டு தரக்கோரி அமர்ந்துள்ளனர். தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.