கிறிஸ்தவர்களுக்கென தனி கல்லறை வேண்டும் என பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்துவ போதகர்கள் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் 10,000 மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் வசித்து வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ ஆலயங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உயிரிழந்த கிறிஸ்தவர்களது உடல் கடந்த 30 வருடங்களாக பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதைக்கப்பட்டு வரும் நிலையில் கிறிஸ்தவர்கள் அது உடல்களை புதைக்க தனி இடம் வேண்டுமென பல்லடம் பகுதியைச் சேர்ந்த போதகர்கள் வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். தொடர்ந்து இதுகுறித்து அவர்கள் கூறுகையில் நாளை கிறிஸ்தவர் ஒருவரது உடலை புதைக்கும் நிலையானது உள்ள நிலையில் தற்போது எங்கு புதைக்க வேண்டும் என கேள்வியானது எழுந்துள்ளது. எனவே உடனடியாக கிறிஸ்துவ மக்களின் உடல்களை புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
கிறிஸ்தவர்களுக்கென தனி கல்லறை வேண்டும்
