• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை மீண்டும் உயர்வு

Byவிஷா

Nov 6, 2024

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரை அதிகரித்து, ஒரு சவரன் 58,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் அக்டோபர் மாத தொடக்க முதலே ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. திடீரென தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த இரு நாட்களாக கணிசமான அளவுக்கு விலை குறைந்தது. ஆனால் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 58,920 ரூபாய்க்கும், ஒரு கிராம் 10 ரூபாய் வரையில் உயர்ந்து 7,365 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 7870 ரூபாய்க்கும், ஒரு சவரன் 62,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 105 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது.