மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழாவை தேமுதிக சார்பில் விஜய்பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர் கூறும் போது, அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜைக்கு வந்து நான் கலந்து கொண்டேன். நான் எது குரு பெயர்ச்சிக்கு முதல் முறை உண்மையாக சந்தோசமா இருக்கிறது. நான் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நான் நின்ற போது தேவர் ஐயா சிலையை நான் வணங்கி உள்ளேன். நீண்ட நாள் போராட்டத்துக்கு மாநாடு நடத்திருக்காங்க எனது வாழ்த்துக்கள்.