• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

ByKalamegam Viswanathan

Oct 28, 2024

வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்
விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கி 113 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் வரவேற்றார். இதில் முன்னாள் மாணவர்கள் வினோத், மருது பாண்டி, நாட்டு நல பணி திட்ட பொறுப்பாளர் பாலமுருகன், ஆசிரியர்கள் சுரேஷ்,ஜெயகவுசல் யா, சகுந்தலா தேவி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கலாவதி நன்றி கூறினார்.