• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில் தமிழக மாணவி 2-வது இடம்

Byமதி

Nov 17, 2021

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நடத்தும் முதுகலை பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வில் கால்நடைத் துறையில் திண்டுக்கல் மாணவி ஓவியா, அகில இந்திய அளவில் 2ஆவது இடம் பிடித்து சாதித்துள்ளார்.

திண்டுக்கல் அடுத்துள்ள பாலகிருஷ்ணபுரம் ஓவியா(24). இவர் பி.வி.எஸ்.சி பட்டப்படிப்பு படித்துள்ளார். இந்நிலையில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்டப் பல்வேறு துறைகளில், மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் முதுகலைப் பாடப் பிரிவில் பயில்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி 2021-22ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதில், மாணவி ஓவியா கால்நடைத் துறையில், அகில இந்திய அளவில் 2ஆவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மொத்தம் 480 மதிப்பெண்களுக்கு, ஓவியா 329 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதன் மூலம், மத்திய பல்கலை. மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் முதுகலைப் பாடப் பிரிவில் சேரவுள்ளார்.

அகில இந்திய அளவில் 2ஆவது இடம் பெற்று சாதனைப் படைத்துள்ள மாணவி ஓவியாவுக்கு, புதுச்சேரி கவர்னர் தமிழசை சவுந்தரராஜன், கால்நடைத்துறை பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.