• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குறைந்தது தங்கம் விலை…

Byமதி

Nov 17, 2021

சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்றத்தாழ்வு நீடித்து வருகிறது. சமீபத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுனுக்கு ரூ.184 உயர்ந்து, ரூ.37,272-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.272 குறைந்து ரூ.37 ஆயிரத்துக்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4,625 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.71 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71-க்கு விற்கிறது.